புதிய வைரஸ் தொற்று ஒரு லட்சத்தை நெருங்கியது

புதிய வைரஸ் தொற்று ஒரு லட்சத்தை நெருங்கியது.

மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 97 ஆயிரத்து 894 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 51 லட்சத்து 18 ஆயிரத்து 253 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 40 லட்சத்து 25 ஆயிரத்து 79 பேர் குணமடைந்துள்ளனர். 10 லட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 1,132 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 83 ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ளது.

முதலிடத்தில் மகாராஷ்டிரா

தேசிய அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 23 ஆயிரத்து 365 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 11 லட்சத்து 21 ஆயிரத்து 221 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 7 லட்சத்து 92 ஆயிரத்து 832 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 97 ஆயிரத்து 506 பேர் சிகிச்சையில் உள்ளனர். 30 ஆயிரத்து 883 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 9 ஆயிரத்து 725 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 4 லட்சத்து 84 ஆயிரத்து 990 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 809 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து ஆயிரத்து 645 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7 ஆயிரத்து 536 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஒரு பெண்ணுக்கு மூக்கில் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஒரு பெண்ணுக்கு மூக்கில் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.

ஆந்திராவில் 8,835 பேர்

மூன்றாவது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 8 ஆயிரத்து 835 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 5 லட்சத்து 92 ஆயிரத்து 760 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 376 பேர் குணமடைந்துள்ளனர். 90 ஆயிரத்து 279 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5 ஆயிரத்து 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

நான்காவது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் நேற்று 6 ஆயிரத்து 229 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 265 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 573 பேர் குணமடைந்துள்ளனர். 67 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 4 ஆயிரத்து 690 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 5,560 பேர்

ஐந்தாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 560 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 25 ஆயிரத்து 420 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 610 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 59 பேர் உயிரிழந்தனர். இதுவரை 8 ஆயிரத்து 618 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூருவில் பெண் ஒருவருக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
பெங்களூருவில் பெண் ஒருவருக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

சென்னையில் 992 பேர்

சென்னையில் இன்று 992 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. கோவையில் 530 பேர், செங்கல்பட்டில் 283 பேர், திருவள்ளூரில் 239 பேர், கடலூரில் 206 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் 37,470 பேர், கேரளாவில் 32,775 பேர், ஒடிசாவில் 32,405 பேர், டெல்லியில் 30,914 பேர், தெலங்கானாவில் 30,443 பேர், அசாமில் 29,091 பேர், மேற்குவங்கத்தில் 24,147 பேர், மத்திய பிரதேசத்தில் 22,136 பேர், ஹரியாணாவில் 21,334 பேர், பஞ்சாபில் 21,022 பேர்,
காஷ்மீரில் 19,503 பேர், ராஜஸ்தானில் 17,049 பேர், குஜராத்தில் 16,262 பேர், ஜார்க்கண்டில் 14,138 பேர், பிஹாரில் 12,959 பேர், உத்தராகண்டில் 11,068 பேர், திரிபுராவில் 7,498 பேர், கோவாவில் 5,375 பேர், இமாச்சல பிரதேசத்தில் 4,146 பேர், சண்டிகரில் 3,171 பேர், மேகாலயாவில் 1,902 பேர்,
அருணாச்சல பிரதேசத்தில் 1,892 பேர், மணிப்பூரில் 1,751 பேர், நாகாலாந்தில் 1,261 பேர், லடாக்கில் 953 பேர், மிசோரமில் 567 பேர், சிக்கிமில் 480 பேர், டையூ-டாமனில் 233 பேர், அந்தமானில் 196 பேர் கரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *