கொரோனா.. சாதாரண சளி காய்ச்சல்.. அடித்துச் சொல்கிறார் சுவிட்சர்லாந்து விஞ்ஞானி

சுவிட்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழக நோய் எதிர்ப்பு துறையின் முன்னாள் இயக்குநர் பேடா எம் ஸ்டாட்லர் வயது (70), கரோனா வைரஸ் குறித்து மருத்துவ இதழ் ஒன்றில் சிறப்பு கட்டுரை எழுதியுள்ளார். அதில் கொரோனா வைரஸ் குறித்து மாறுபட்ட கருத்துகளை கூறியிருக்கிறார். இதை சில விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பல விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். எனினும் சுவிட்சர்லாந்து விஞ்ஞானி பேடாவின் கட்டுரை உலகம் முழுவதும் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அவரது கட்டுரையின் சுருக்கம்:
“கரோனாவை புதிய வைரஸ் என்று கூறுவது தவறு. இதற்கு முன்பு கடந்த 2002-ம் ஆண்டில் சார்ஸ் மற்றும் சார்ஸ்-சிஓவி-2 வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதில் ஒரு வகைதான் கொரோனா. குளிர்காலத்தில் இந்த வைரஸ்கள் பரவும். கோடை காலத்தில் காணாமல் போய்விடும்.
கொரோனாவிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு அச்சுறுத்துகிறது. இது முற்றிலும் தவறு, மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் வலுவானது. நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கொரோனா வைரஸை ஓட ஓட விரட்டியடிக்கும்.


எவ்வித அறிகுறியும் இல்லாமல் கொரோனா நோயாளிகள் ஆரோக்கியமாக உள்ளனர் என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. மனித உடலின் ஏதாவது ஒரு பாகத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்டால், நோய் எதிர்ப்பு சக்தி விழித்துக் கொள்ளும். வைரஸை எதிர்த்துப் போரிடும். அப்போது உடலில் வலி ஏற்படும். எனவே கொரோனா நோயாளிகளுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

சீனாவின் வூஹானில் உள்ள வைராலஜி ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நகரம்தான் கொரோனா வைரஸின் பிறப்பிடமாகும். இங்கிருந்தே கொரோனா வைரஸ் கசிந்ததாக ஒரு குற்றச்சாட்டும் உள்ளது.
சீனாவின் வூஹானில் உள்ள வைராலஜி ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நகரம்தான் கொரோனா வைரஸின் பிறப்பிடமாகும். இங்கிருந்தே கொரோனா வைரஸ் கசிந்ததாக ஒரு குற்றச்சாட்டும் உள்ளது.


மனித உடலில் வைரஸ் நுழையும்போது, நோய் எதிர்ப்பு சக்தி வைரஸை எதிர்த்துப் போரிடும். இரண்டாம் கட்டமாக ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் (டி செல்ஸ்) உடலின் அனைத்து பாகங்களிலும் சல்லடை போட்டு தேடி, கடைசி வைரஸ் அழியும்வரை போரிடும்.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட ஒருவரை, நாம் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்துகிறோம். அப்போது அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது. உண்மையில் அவர் நோயாளி கிடையாது.


அவரது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியால் அழிக்கப்பட்ட கரோனா வைரஸின் சிதைவுகள் அவரது சளி மாதிரிகளில் தேங்கியிருக்கும். அந்த வைரஸ் சிதைவு காரணமாகவே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக பரிசோதனை முடிவு வருகிறது. இதுதான் இப்போது உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதற்கும் இதுவே முக்கிய காரணம்.


ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்த வைரஸ் குளிர்காலத்தில் மீண்டும் பரவும். இது சாதாரண சளி காய்ச்சல். அச்சப்பட தேவையில்லை. ஆரோக்கியமான இளைஞர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை.


என்னைப் பொறுத்தவரை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளது. அவர்களை வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்ற முன்னுரிமை அளித்தால் போதுமானது” என்று சுவிட்சர்லாந்து விஞ்ஞானி பேடா எம் ஸ்டாட்லர் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *