கொரோனாவில் இருந்து குணமானவர்கள் 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போடலாம்

கொரோனாவில் இருந்து குணமானவர்கள் 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போடலாம் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியின் முதல் தவணை போட்ட பிறகு வைரஸ் தொற்று ஏற்பட்டால், மருத்துவரீதியாக குணமடைந்தது உறுதி செய்யப்பட்ட பிறகு 3 மாதங்கள் கழித்து 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

மருத்துவமனை, ஐசியூவில் சேர்ந்து சிகிச்சை பெறும் இதர நோயாளிகள் நோயில் இருந்து குணமான பிறகு 4 வாரங்கள் முதல் 8 வாரங்கள் கழித்த பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்ட 14 நாட்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம். பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள எந்த தடையும் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *