தமிழகம் முழுவதும் 24,586 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இதில் 17,090 பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது மாநிலம் முழுவதும் 70 சதவீதம் பேருக்கு எதிர்பாற்றல் உருவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை 82 சதவீதம் பேருக்கு எதிர்ப்பாற்றல் உள்ளது என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.