தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக இருந்தது. கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கி தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று உயர்ந்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 670 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 265 பேருக்கும் செங்கல்பட்டில் 57 பேருக்கும், கோவையில் 51 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
தேசிய அளவில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. அந்த மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று 16,000-ஐ நெருங்கியது. பஞ்சாப், ஹரியாணா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா தொற்று ஏறுமுகமாக உள்ளது.