கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுள்ள நபர், இருமும்போதும் தும்மும்போதும் காற்றில் சிதறும் திவலைகள் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு வைரஸ் பரவுகிறது. மேலும் வைரஸ் தொற்றுள்ள நபரின் சுவாசக்காற்று வெளியாகும்போது அருகில் இருப்பவர்களுக்கு தொற்று ஏற்படுகிறது.
அதாவது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இதன்காரணமாகவே உலகம் முழுவதும் காட்டுத்தீயாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் காற்றில் பரவாது என்றே உலக சுகாதார அமைப்பும் சர்வதேச விஞ்ஞானிகளும் கூறி வந்தனர். அந்த கூற்று தவறு, காற்று மூலமாகவும் வைரஸ் பரவுகிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளின் விஞ்ஞானிகளை மேற்கோள் காட்சி செய்தி பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அந்த செய்தியின் சுருக்கம்:
அமெரிக்கா மற்றம் 32 நாடுகளை சேர்ந்த 230 விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் குறித்து மிக தீவிரமாக ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவர்களின் ஆய்வின்படி கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது. இதற்கு ஆதாரம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் இருமும்போதும் தும்மும்போதும் வெளியாகும் கொரோனா வைரஸ் காற்றில் பரவி அருகில் இருப்பவர்களுக்கு வைரஸ் பரவுகிறது. அதாவது காற்றில் கலந்திருக்கும் வைரஸை சுவாசிக்கும் நபருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இதன்காரணமாகவே வைரஸ் காட்டுத்தீயாக பரவி வருகிறது. எனவே உலக சுகாதார அமைப்பு எங்கள் ஆய்வறிக்கையை ஏற்று விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று 32 நாடுகளின் விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.