தியாகநராய நகர், கொத்தவால்சாவடி, திருமழிசை காற்கறி மார்க்கெட் போன்ற பகுதிகளில் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்.

ஆங்காங்கே உள்ள வணிகர்கள் மற்றும் அரசு அங்கீகரித்துள்ள பரிசோதனை மையங்களோடு இணைந்து முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் மூடி வைக்கப்பட்டுள்ள சந்தைகளை திறக்க வேண்டும். குறிப்பாக கோயம்பேடு காய்கறி சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.