இந்தியாவில் 67,708 பேர்.. தமிழகத்தில் 4,410 பேருக்கு கொரோனா…வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று 67,708 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73,07,097 ஆக உயர்ந்துள்ளது. இதில் 63,83,441 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் 8,12,390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 680 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,11,266 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய அளவிலான கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 10,552 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதில் 13,16,769 பேர் குணமடைந்துள்ளனர். 1,96,761 பேர் சிகிச்சையில் உள்ளனர். 40,859 பேர் உயிரிழந்துள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 3,892 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 7,67,465 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,19,477 பேர் குணமடைந்துள்ளனர். 41,669 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 6,319 பேர் உயிரிழந்துள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 9,265 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 7,35,371 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,11,167 பேர் குணமடைந்துள்ளனர். 1,14,006 பேர் சிகிச்சையில் உள்ளனர். 10,198 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேசிய அளவிலான கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இன்று 4,410 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
மாநிலத்தில் இதுவரை 6,74,802 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,22,458 பேர் குணமடைந்துள்ளனர். 41,872 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 49 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 10,472 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,148 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் 395 பேர், செங்கல்பட்டில் 255 பேர், திருவள்ளூரில் 192 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் நேற்று 2,593 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு 4,44,711 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 4,01,306 பேர் குணமடைந்துள்ளனர். 36,898 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,507 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் நேற்று 3,324 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 3,17,548 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,89,747 பேர் குணமடைந்துள்ளனர். 21,903 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5,898 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் இன்று 7,789 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 3,17,929 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,22,231 பேர் குணமடைந்துள்ளனர். 94,517 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,089 பேர் உயிரிழந்துள்ளனர்.