இந்தியாவில் 63,371 பேர்.. தமிழகத்தில் 4,389 பேருக்கு கொரோனா…வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 63,371 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்ந்துள்ளது. இதில் 64,53,779 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் 8,04,528 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 895 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,12,161 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிராவில் நேற்று 10,226 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.அந்த மாநிலத்தில் 15,64,615 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,30,483 பேர் குணமடைந்துள்ளனர். 1,92,936 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 41,196 பேர் உயிரிழந்துள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் புதிதாக 4,038 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு இதுவரை 7,71,503 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,25,099 பேர் குணமடைந்துள்ளனர். 40,047 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,357 பேர் உயிரிழந்துள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் புதிதாக 8,477 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 7,43,848 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 6,20,008 பேர் குணமடைந்துள்ளனர். 1,13,557 பேர் சிகிச்சையில் உள்ளனர். 10,283 பேர் உயிரிழந்துள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 4,389 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 6,79,191 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 6,27,703 பேர் குணமடைந்துள்ளனர். 40,959 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 57 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 10,529 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 1,140 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் 387 பேர், செங்கல்பட்டில் 261 பேர், திருவள்ளூரில் 195 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் புதிதாக 2,672 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,47,383 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,04,545 பேர் குணமடைந்துள்ளனர்.
36,295 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,543 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் புதிதாக 3,483 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு 3,21,031 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,92,502 பேர் குணமடைந்துள்ளனர். 5,924 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் நேற்று 7,283 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 3,25,212 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,28,998 பேர் குணமடைந்துள்ளனர். 95,008 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,113 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் இன்று நடந்த கூட்டத்தில் பேசியபோது, “அடுத்தடுத்து பல்வேறு பண்டிகைகள் வருகின்றன.
குளிர் காலம் தொடங்க உள்ளது. எனவே கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் அடுத்த இரண்டரை மாதங்கள் மிகவும் முக்கியமானது. கரோனா தடுப்பூசி சந்தையில் விற்பனைக்கு வரும்வரை பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.