இந்தியாவில் 62,212 பேர்.. தமிழகத்தில் 4,295 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று 62,212 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,32,680 ஆக உயர்ந்துள்ளது. இதில் 65,24,595 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் 7,95,087 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒன்றரை மாதங்களில் முதல்முறையாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. ஒரே நாளில் 837 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,12,998 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 11,447 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 15,76,062 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,44,368 பேர் குணமடைந்துள்ளனர். 1,90,192 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 41,502 பேர் உயிரிழந்துள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 3,967 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 7,75,470 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,30,109 பேர் குணமடைந்துள்ளனர். 38,979 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,382 பேர் உயிரிழந்துள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 7,542 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 7,51,390 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 6,28,588 பேர் குணமடைந்துள்ளனர். 1,12,446 பேர் சிகிச்சையில் உள்ளனர். 10,356 பேர் உயிரிழந்துள்ளனர்.
நான்காவது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 4,295 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 6,83,486 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,32,708 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 40,192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 57 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 10,586 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1,132 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கோவையில் 389 பேர், செங்கல்பட்டில் 231 பேர், திருவள்ளூரில் 218 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
5-வது இடத்தில் உள்ள உத்தரபிரதேசத்தில் புதிதாக 2,552 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,49,935 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,08,083 பேர் குணமடைந்துள்ளனர். 35,263 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,589 பேர் உயிரிழந்துள்ளனர்.
6-வது இடத்தில் கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் இன்று 9,016 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 3,34,228 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,36,989 பேர் குணமடைந்துள்ளனர். 96,004 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,139 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தலால் கேரளா முழுவதும் 385 மருத்துவர்கள் உட்பட 432 பேர் நீண்ட விடுப்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.