இந்தியாவில் 61,871 பேர்.. தமிழகத்தில் 3,914 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் ஒரே நாளில் 61,871 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 74,94,551 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 65,97,209 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 72,614 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 88.03 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 7,83,311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 1,033 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,14,031 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 10,259 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 15,86,321 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,58,606 பேர் குணமடைந்துள்ளனர். 1,85,750 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 41,965 பேர் உயிரிழந்துள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 3,676 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 7,79,146 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,35,638 பேர் குணமடைந்துள்ளனர். 37,102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,406 பேர் உயிரிழந்துள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 7,184 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 7,58,574 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 6,37,481 பேர் குணமடைந்துள்ளனர். 1,10,666 பேர் சிகிச்சையில் உள்ளனர். 10,427 பேர் உயிரிழந்துள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 3,914 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. பல நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் புதிய தொற்று 4 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 6,87,400 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,37,637 பேர் குணமடைந்துள்ளனர். 39,121 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 56 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 10,642 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1,036 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கோவையில் 319 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
5-வது இடத்தில் உள்ள உத்தரபிரதேசத்தில் 2,725 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,52,660 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,11,611பேர் குணமடைந்துள்ளனர். 34,420 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,629 பேர் உயிரிழந்துள்ளனர்.
6-வது இடத்தில் உள்ள கேரளாவில் இன்று 7,631 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 3,41,859 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,45,399 பேர் குணமடைந்துள்ளனர். 95,200 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,161 பேர் உயிரிழந்துள்ளனர்.