இந்தியாவில் 54,044 பேர்.. தமிழகத்தில் 3,086 பேருக்கு கொரோனா… தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று 54,044 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76,51,107 ஆக உயர்ந்துள்ளது. இதில் 67,95,103 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 61,775 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 7,40,090 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 717 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,15,914 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 8,151 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 16,09,516 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,92,308 பேர் குணமடைந்துள்ளனர். 1,74,755 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 42,453 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் நேற்று 3,503 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 7,89,553 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,49,676 பேர் குணமடைந்துள்ளனர். 33,396 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,481 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் நேற்று 6,297 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 7,76,901 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,62,329 பேர் குணமடைந்துள்ளனர். 1,03,964 பேர் சிகிச்சையில் உள்ளனர். 10,608 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் இன்று 845 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 314 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.
உத்தர பிரதேசத்தில் நேற்று 2,289 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,59,154 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 4,22,024 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 30,416 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,714 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் இதர மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று கணிசமாக குறைந்து வருகிறது. ஆனால் கேரளாவில் மட்டும் நாள்தோறும் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் நேற்று 8,369 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 3,61,841 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,67,082 பேர் குணமடைந்துள்ளனர். 93,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,232 பேர் உயிரிழந்துள்ளனர்.