இந்தியாவில் 55,839 பேர்.. தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று 55,839 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77,06,946 ஆக உயர்ந்துள்ளது. இதில் 68,74,518 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 79,415 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 89.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 7,15,812 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 702 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,16,616 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 8,142 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 16,17,658 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 14,15,679 பேர் குணமடைந்துள்ளனர். 1,59,346 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 42,633 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் நேற்று 3,746 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 7,93,299 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,54,415 பேர் குணமடைந்துள்ளனர். 32,376 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,508 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் நேற்று 5,872 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 7,82,773 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 6,71,618 பேர் குணமடைந்துள்ளனர். 1,00,459 பேர் சிகிச்சையில் உள்ளனர். 10,696 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கு அடுத்து கோவையில் 285 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.
உத்தர பிரதேசத்தில் நேற்று 2,321 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் 4,61,475 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 4,25,356 பேர் குணமடைந்துள்ளனர். 29,364 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,755 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் இன்று 7,482 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 3,69,323 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,74,675 பேர் குணமடைந்துள்ளனர். 93,291 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,255 பேர் உயிரிழந்துள்ளனர்.