இந்தியாவில் 54,366 பேர்.. தமிழகத்தில் 3,057 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று 54,366 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77,61,312 ஆக உயர்ந்துள்ளது. இதில் 69,48,497 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 73,979 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
மருத்துவமனைகளில் 6,96,508 பேர் சிகிச்சையில் உள்ளனர். சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. ஒரே நாளில் 690 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,17,306 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 7,539 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் 16,25,197 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 14,31,856 பேர் பேர் குணமடைந்துள்ளனர். 1,50,510 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 42,831 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் நேற்று 3,620 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 7,96,919 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,58,138 பேர் குணமடைந்துள்ளனர். 32,257 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,524 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் நேற்று 5,778 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 7,88,551 பேர் வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் 6,84,835 பேர் குணமடைந்துள்ளனர். 92,946 பேர் சிகிச்சையில் உள்ளனர். 10,770 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,03,250 ஆக அதிகரித்துள்ளது. இதில் 6,59,432 பேர் குணமடைந்துள்ளனர். 32,960 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 33 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 10,858 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னைக்கு அடுத்து கோவையில் 280 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
உத்தர பிரதேசத்தில் நேற்று 2,383 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் 4,63,858 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 4,27,937 பேர் குணமடைந்துள்ளனர். 29,131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,790 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் இன்று 8,511 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,77,834 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,80,793 பேர் குணமடைந்துள்ளனர். 95,657 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,281 பேர் உயிரிழந்துள்ளனர்.