இந்தியாவில் 43,893 பேர்.. தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 43,893 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 79,90,322 ஆக அதிகரித்துள்ளது. இதில் 72,59,509 பேர் குணமடைந்துள்ளனர். தேசிய அளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 90.85 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 6,10,803 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 508 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,20,010 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 5,363 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 16,54,028 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 14,78,496 பேர் குணமடைந்துள்ளனர். 1,32,069 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 43,463 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் நேற்று 2,901 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,11,825 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,77,900 பேர் குணமடைந்துள்ளனர். 27,300 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,625 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் நேற்று 3,691 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,09,638 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 7,27,298 பேர் குணமடைந்துள்ளனர். 71,349 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10,991 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 7,16,751 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,79,377 பேர் குணமடைந்துள்ளனர். 26,356 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 35 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,018 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 688 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவையில் 218 பேர், செங்கல்பட்டில் 150 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் நேற்று 1,977 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,74,054 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,40,847 பேர் குணமடைந்துள்ளனர். 26,267 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,940 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று கணிசமாக குறைந்து வருகிறது. ஆனால் சிறிய மாநிலமான கேரளாவில் மட்டும் புதிய தொற்று தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அந்த மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநிலத்தில் இதுவரை 4,11,464 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,16,692 பேர் குணமடைந்துள்ளனர். 93,264 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,403 பேர் உயிரிழந்துள்ளனர்.