இந்தியாவில் 44,281 பேர்.. தமிழகத்தில் 2,184 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 44,281 பேர்.. தமிழகத்தில் 2,184 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 44,281 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86,36,011 ஆக உயர்ந்துள்ளது. இதில் 80,13,783 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 50,326 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 92.79 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 2-வது வாரத்தில் இந்தியாவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அப்போது நாள்தோறும் 90,000 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வந்தது.

அக்டோபர் மாதத்தில் தினசரி வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. தற்போது நாள்தோறும் சராசரியாக 50,000 பேருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. இதேபோல நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது.

மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 4,94,657 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 106 நாட்களுக்குப் பிறகு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழாக குறைந்திருக்கிறது. 

ஒரே நாளில் 512 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,27,571 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 3,791 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 17,26,926 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,88,091 பேர் குணமடைந்துள்ளனர். 93,400 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 45,435 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் நேற்று 2,362 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,51,212 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 8,08,700 பேர் குணமடைந்துள்ளனர். 31,082 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,430 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் நேற்று 1,886 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,46,245 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 8,18,473 பேர் குணமடைந்துள்ளனர். 20,958 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,814 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 2,184 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 7,50,409 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,20,339 பேர் குணமடைந்துள்ளனர். 18,655 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 28 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,415 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 571 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கோவையில் 189 பேர், செங்கல்பட்டில் 142 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.  

உத்தர பிரதேசத்தில் நேற்று 2,112 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 5,01,311 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,71,204 பேர் குணமடைந்துள்ளனர். 22,846 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,261 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் இன்று 7,007 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,02,719 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4,22,410 பேர் குணமடைந்துள்ளனர். 78,420 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,771 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் நேற்று 7,830 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 4,51,382 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,02,854 பேர் குணமடைந்துள்ளனர். 41,385 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,143 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்குவங்கத்தில் 3,891 பேர், ஒடிசாவில் 987 பேர், தெலங்கானாவில் 1,196 பேர், பிஹாரில் 429 பேர், ராஜஸ்தானில் 1,902 பேர், அசாமில் 271 பேர், சத்தீஸ்கரில் 1,679 பேர், ஹரியாணாவில் 2,546 பேர், குஜராத்தில் 1,049 பேர், மத்திய பிரதேசத்தில் 900 பேர், பஞ்சாபில் 486 பேர், ஜார்க்கண்டில் 252 பேர், காஷ்மீரில் 492 பேருக்கு நேற்று வைரஸ் தொற்று ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *