இந்தியாவில் 61,267 பேர்.. தமிழகத்தில் 5,017 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 61,267 பேர்.. தமிழகத்தில் 5,017 பேருக்கு கொரோனா…வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று  61,267 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. நாள்தோறும் 70,000 முதல் 95,000 வரை கரோனா வைரஸ் தொற்று பதிவாகி வருகிறது. இந்நிலையில் கடந்த 40 நாட்களில் முதல்முறையாக புதிய வைரஸ் தொற்று 61 ஆயிரமாக குறைந்திருக்கிறது.

இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  66,85,082 ஆக அதிகரித்துள்ளது. இதில் 56,62,490 பேர் குணமடைந்துள்ளனர். தேசிய அளவில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 84.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

9 லட்சம் பேருக்கு சிகிச்சை

மருத்துவமனைகளில்  9,19,023 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 884 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,03,569 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் புதிதாக 10,244 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 14,53,653 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ராணுவம் சார்பில் நடத்தப்படும் கொரோனா மருத்துவமனை.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ராணுவம் சார்பில் நடத்தப்படும் கொரோனா மருத்துவமனை.

இதில் 11,62,585 பேர் குணமடைந்துள்ளனர். 2,52,721 பேர் சிகிச்சையில் உள்ளனர். 38,347 பேர் உயிரிழந்துள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் புதிதாக 7,051 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 6,47,712 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 5,22,846 பேர் குணமடைந்துள்ளனர். 1,15,496 பேர் சிகிச்சையில் உள்ளனர். 9,370 பேர் உயிரிழந்துள்ளனர்.

3-வது இடத்தில் கேரளாவில் இன்று 7,871 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில்  2,42,799 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,54,092 பேர் குணமடைந்துள்ளனர்.  87,738 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் புதிதாக 4,256 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு 7,23,512 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 6,66,433 பேர் குணமடைந்துள்ளனர். 51,060 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

5-வது இடத்தில் தமிழகம்

5-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 5,017 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 6,30,408 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5,75,212 பேர் குணமடைந்துள்ளனர். 45,279 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 71 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 9,917 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1,306 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. கோவையில் 434 பேர், செங்கல்பட்டில் 283 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

உத்தர பிரதேசத்தில் 45,024 பேர்,  அசாமில் 33,467 பேர், ஒடிசாவில் 28,006 பேர், சத்தீஸ்கரில் 27,857 பேர், மேற்குவங்கத்தில் 27,717 பேர், தெலங்கானாவில் 26,644 பேர், டெல்லியில் 23,080 பேர், ராஜஸ்தானில் 21,215 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *