இந்தியாவில் 72,049 பேர்.. தமிழகத்தில் 5,447 பேர்…

இந்தியாவில் 72,049 பேர்.. தமிழகத்தில் 5,447 பேர்… கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 72,049 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. 

இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67,57,131 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் 57,44,693 பேர் குணமடைந்துள்ளனர். 9,07,883 பேர் சிசிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 986 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,04,555 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 12,258 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 14,65,911 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் 11,79,726 பேர் குணமடைந்துள்ளனர். 2,47,468 பேர் சிகிச்சையில் உள்ளனர். 38,717 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் நேற்று 5,795 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

அங்கு 7,29,307 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,72,479 பேர் குணமடைந்துள்ளனர். 50,776 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,052 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் நேற்று 9,993 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 6,57,705 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 

இதில் 5,33,074 பேர் குணமடைந்துள்ளனர். 1,15,170 பேர் சிகிச்சையில் உள்ளனர். 9,461 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் இதுவரை 4,20,937 பேர், டெல்லியில் 2,95,236 பேர், மேற்குவங்கத்தில் 2,77,049 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 

கேரளாவில் முதல்முறையாக  புதிய வைரஸ் தொற்று 10 ஆயிரத்தை தாண்டியது. அந்த மாநிலத்தில் இன்று 10,606 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

2,53,405 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,60,253 பேர் குணமடைந்துள்ளனர். 92,161 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 906 பேர் உயிரிழந்துள்ளனர்.

 தமிழகத்தில் இன்று 5,447 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,35,855 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் 5,80,736 பேர் குணமடைந்துள்ளனர். 45,135 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 67 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 9,984 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1,369 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சென்னையில் படிப்படியாக வைரஸ் தொற்று அதிகரித்து வருவது சென்னைவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் 473 பேர், செங்கல்பட்டில் 324 பேர், திருவள்ளூரில் 252 பேருக்கு இன்று கொரோனா தொற்று ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *