இந்தியாவில் 70,496 பேர்.. தமிழகத்தில் 5,186 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று 70,496 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69,06,151 ஆக உயர்ந்துள்ளது. இதில் 59,06,069 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 78,365 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 85.52 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 8,93,592 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 964 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,06,490 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 13,395 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 14,93,884 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,12,016 பேர் குணமடைந்துள்ளனர். 2,42,438 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 39,430 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் நேற்று 5,292 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.39 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதில் 6.84 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 48,661 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 6,128 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் நேற்று 10,704 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 6,79,356 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 5,52,519 பேர் குணமடைந்துள்ளனர். 1,17,162 பேர் சிகிச்சையில் உள்ளனர். 9,675 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 5,186 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,46,128 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,91,811 பேர் குணமடைந்துள்ளனர். 44,197 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 68 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 10 ஆயிரத்து 120 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,288 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. கோவையில் 397, செங்கல்பட்டில் 343, திருவள்ளூரில் 226 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
உத்தர பிரதேசத்தில் நேற்று 3,376 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 4,27,459 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 3,78,662 பேர் குணமடைந்துள்ளனர். 42,552 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,245 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் இன்று 2,860 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 2,72,948 பேர் குணமடைந்துள்ளனர். 22,232 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5,653 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்குவங்கத்தில் நேற்று 3,526 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 2,84,030 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இதில் 2,49,737 பேர் குணமடைந்துள்ளனர். 28,854 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,439 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் இன்று 9,250 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.
ஒட்டுமொத்தமாக 2,68,100 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,75,304 பேர் குணமடைந்துள்ளனர். 91,756 பேர் சிகிச்சையில் உள்ளனர். 955 பேர் உயிரிழந்துள்ளனர்.