இந்தியாவில் 73,272 பேர்.. தமிழகத்தில் 5,242 பேருக்கு கொரோனா…வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று 73,272 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69,79,424 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 59,88,823 பேர் குணமடைந்துள்ளனர். தேசிய அளவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 85.52 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 8,83,185 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 926 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,07,416 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக 12,134 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 15,06,018 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 12,29,339 பேர் குணமடைந்துள்ளனர். 2,36,491 பேர் சிகிச்சையில் உள்ளனர். 39,732 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் புதிதாக 5,145 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 7,44,864 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,91,040 பேர் குணமடைந்துள்ளனர். 47,665 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,159 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் புதிதாக 10,913 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 6,90,269 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 5,61,610 பேர் குணமடைந்துள்ளனர். 9,789 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 5,242 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எம்ணிக்கை 6,51,370 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 5,97,033 பேர் குணமடைந்துள்ளனர். 44,150 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் இன்று 1,272 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.
கோவையில் 392 பேர், சேலத்தில் 339 பேர், செங்கல்பட்டில் 309 பேர், திருவள்ளூரில் 199 பேர், தஞ்சாவூரில் 189 பேர், திருப்பூரில் 183 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் இதுவரை 4,30,666 பேர், டெல்லியில் 3,03,693 பேர், மேற்குவங்கத்தில் 2,87,603 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கேரளாவில் நேற்று 11,755 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 2,79,855 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,82,874 பேர் குணமடைந்துள்ளனர். 95,918 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 978 பேர் உயிரிழந்துள்ளனர்.