இந்தியாவில் 74,383 பேர்.. தமிழகத்தில் 5,015 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 74,383 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 70,53,806 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 60,77,976 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் 8,67,496 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 918 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,08,334 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 11,416 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.
அந்த மாநிலத்தில் 15,17,434 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,55,779 பேர் குணமடைந்துள்ளநர். 2,21,615 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 40,040 பேர் உயிரிழந்துள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 5,653 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 7,50,517 பேர் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 6,97,699 பேர் குணமடைந்துள்ளனர். 46,624 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,194 பேர் உயிரிழந்துள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் புதிதாக 10,517 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 7,00,786 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 5,69,947 பேர் குணமடைந்துள்ளனர்.
1,20,948 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9,891 பேர் உயிரிழந்துள்ளனர்.
நான்காவது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 5,015 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.
மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 6,56,385 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,02,038 பேர் குணமடைந்துள்ளனர். 44,095 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 65 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 10,252 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1,250 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. கோவையில் 389 பேர், செங்கல்பட்டில் 259 பேர், திருவள்ளூரில் 198 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் இதுவரை 4,33,712 பேர், டெல்லியில் 3,06,559 பேர், மேற்குவங்கத்தில் 2,91,194 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நேற்று முன்தினம் 11,755 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.
அந்த மாநிலத்தில் நேற்று 9,347 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 2,89,202 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,91,798 பேர் குணமடைந்துள்ளனர். 96,316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,003 பேர் உயிரிழந்துள்ளனர்.