இந்தியாவில் 66,732 பேர்.. தமிழகத்தில் 4,879 பேருக்கு கொரோனா…வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 66,732 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71,20,538 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 8,61,853 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 4 நாட்களாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 9 லட்சத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 816 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,09,150 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 10,792 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 15,28,226 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 12,66,240 பேர் குணமடைந்துள்ளனர். 2,21,637 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 40,349 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் நேற்று 5,210 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 7,55,727 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இதில் 7,03,208 பேர் குணமடைந்துள்ளனர். 46,295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,224 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் நேற்று 9,523 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு 7,10,309 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 5,80,054 பேர் குணமடைந்துள்ளனர். 1,20,289 பேர் சிகிச்சையில் உள்ளனர். 9,966 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 4,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் இதுவரை 6,61,264 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 6,07,203 பேர் குணமடைந்துள்ளனர். 43,747 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இன்று 62 பேர் உயிரிழந்தனர்.
ஒட்டுமொத்த உயிரிழப்பு 10,314 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1,212 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கோவையில் 393 பேர், சேலத்தில் 304 பேர், செங்கல்பட்டில் 245 பேர், திருவள்ளூரில் 229 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் இதுவரை 4,36,979 பேர், டெல்லியில் 3,09,339 பேர், மேற்குவங்கத்தில் 2,94,806 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 5,930 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 2,95,132 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,99,634 பேர் குணமடைந்துள்ளனர். 94,388 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,025 பேர் உயிரிழந்துள்ளனர்.