இந்தியாவில் 63,509 பேர்.. தமிழகத்தில் 4,462 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் ஒரே நாளில் 63,509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72,39,389 ஆக உயர்ந்துள்ளது. இதில் 63,01,927 பேர் குணடைந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் 8,26,876 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 730 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,10,586 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் புதிதாக 8,522 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.
அந்த மாநிலத்தில் 15,43,837 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,97,252 பேர் குணமடைந்துள்ளனர். 2,05,884 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 40,791 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் நேற்று 4,622 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 7,63,573 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 7,14,427 பேர் குணமடைந்துள்ளனர். 42,855 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,291 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் நேற்று 8,191 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு 7,26,106 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இதில் 6,02,505 பேர் குணமடைந்துள்ளனர். 1,13,478 பேர் சிகிச்சையில் உள்ளனர். 10,123 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 4,462 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 6,70,392 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 6,17,403 பேர் குணமடைந்துள்ளனர். 42,566 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 52 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 10,423 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,130 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கோவையில் 389 பேர், செங்கல்பட்டில் 272 பேர், திருவள்ளூரில் 207 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
உத்தர பிரதேசத்தில் புதிதாக 2,957 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 4,42,118 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,97,570 பேர் குணமடைந்துள்ளனர். 38,082 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,466 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் நேற்று 3,036 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 3,14,224 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 2,86,880 பேர் குணமடைந்துள்ளனர். 21,490 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5,854 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் இன்று 6,244 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 3,10,140 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 2,15,149 பேர் குணமடைந்துள்ளனர். 93,837 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,066 பேர் உயிரிழந்துள்ளனர்.