இந்தியாவில் 86,961 பேர்.. தமிழகத்தில் 5,344 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 86,961 பேர்.. தமிழகத்தில் 5,344 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 86,961 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54 லட்சத்து 87 ஆயிரத்து 580 ஆக உயர்ந்துள்ளது. இதில் 43 லட்சத்து 96 ஆயிரத்து 399 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் மட்டும் 93 ஆயிரத்து 356 பேர் குணமடைந்தனர். தொடர்ந்து 3-வது நாளாக குணமடைந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 299 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 1,130 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 87 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 20 ஆயிரத்து 627 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 12 லட்சத்து 8 ஆயிரத்து 642 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 8 லட்சத்து 84 ஆயிரத்து 341 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 91 லட்சத்து 630 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 455 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

ட்டுமொத்த உயிரிழப்பு 32 ஆயிரத்து 671 ஆக அதிகரித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 8 ஆயிரத்து 191 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 5 லட்சத்து 19 ஆயிரத்து 537 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 452 பேர் குணமடைந்துள்ளனர். 98 ஆயிரத்து 62 பேர் சிகிச்சையில் உள்ளனர். 8 ஆயிரத்து 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 7 ஆயிரத்து 738 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 6 லட்சத்து 25 ஆயிரத்து 514 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 319 பேர் குணமடைந்துள்ளனர். 78 ஆயிரத்து 836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 ஆயிரத்து 359 பேர் உயிரிழந்துள்ளனர்.

நான்காவது இடத்தில் உத்தர பிரதேசத்தில் புதிதாக 5 ஆயிரத்து 758 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 3 லட்சத்து 54 ஆயிரத்து 275 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 274 பேர் குணமடைந்துள்ளனர். 65 ஆயிரத்து 954 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 5 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

மாநிலத்தில் இதுவரை 5 லட்சத்து 47 ஆயிரத்து 337 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 971 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 495 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 871 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டவாரியான வைரஸ் பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

சென்னையில் இன்று 982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவையில் 648 பேர், செங்கல்பட்டில் 219 பேர், திருவள்ளூரில் 212 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

6-வது இடத்தில் உள்ள கேரளாவில் 2 ஆயிரத்து 910 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அந்த மாநிலத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 631 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 98 ஆயிரத்து 724 பேர் குணமடைந்துள்ளனர். 39 ஆயிரத்து 285 பேர் சிகிச்சையில் உள்ளனர். 553 பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கரில் 37,853 பேர், ஒடிசாவில் 33,504 பேர், டெல்லியில் 32,097 பேர், தெலங்கானாவில் 29,636 பேர், அசாமில் 28,780 பேர், மேற்குவங்கத்தில் 24,806 பேர், மத்திய பிரதேசத்தில் 22,300 பேர், பஞ்சாபில் 22,278 பேர், காஷ்மீரில் 22,032 பேர், ஹரியாணாவில் 21,411 பேர் கரோனா வைரஸ் தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *