அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கடந்த சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
இதேபோல தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஆக. 22-ம் தேதி முதல்  24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். இதன்படி தமிழகம் முழுவதும் 55 அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *