கொரோனா தடுப்பூசிக்கு அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது

கொரோனா தடுப்பூசிக்கு அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள ஊழியர்களுக்கு தடுப்பூடி போடும் பணி நடைபெற்று வருகிறது. 

அடுத்த கட்டமாக மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கக்கூடாது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *