ஜூலைக்குள் 26 கோடி பேருக்கு கொரோனா தடூப்பூசி

ஜூலைக்குள் 26 கோடிக்கு கொரோனா தடூப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 30 கொரோனா தடுப்பூசிகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. 

இதில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் மருந்து நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’, குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்த ஜைடஸ் கேடில்லா மருந்து நிறுவனம் தயாரித்துள்ள ‘ஜைகோவ்-டி’ கரோனா தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ‘கோவிட் ஷீல்டு’ என்ற கொரோனா தடுப்பூசியை மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த செரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவில் பரிசோதித்து வருகிறது. 

இதேபோல ரஷ்ய அரசு நிறுவனமான கமலேயா இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள ‘ஸ்புட்னிக் வி’ என்ற கொரோனா தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபாரேட்டரீஸ் இந்தியாவில் விநியோகம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த பின்னணியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கொரோனா தடுப்பூசி குறித்து நிருபர்களுக்கு விரிவான பேட்டியளித்துள்ளார்.

“கொரோனா தடுப்பூசியை மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வாங்குவது முதல் அதை மக்களுக்கு வழங்குவது வரை அனைத்து நடைமுறைகளையும் நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் தலைமையிலான குழு திட்டமிட்டு வருகிறது. 

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் 20 கோடி முதல் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இதுதொடர்பான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம்” என்று அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *