18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்குகிறது.

கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. கடந்த மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கடந்த ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் போதிய தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் தமிழகத்தில் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் மே 20-ம் தேதி வியாழக்கிழமை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் ஆட்டோ ஓட்டுநர், ஆலை தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *