2 முதல் 18 வயதுடையோருக்கான கொரோனா தடுப்பூசி சோதனை

2 முதல் 18 வயதுடையோருக்கான கொரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி கோவாக்சின் மருந்தை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய உள்ளது. ஆரோக்கியமான 525 தன்னார்வலர்களிடம் இந்த தடுப்பூசியை இரண்டு தவணைகளாக செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *