அனைவருக்கும் தடுப்பூசி போடப்படாது

அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா கடந்த புதன்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

“அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு இதுவரை சொல்லவே இல்லை. கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைத்தால்விட்டால், ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார்.

இந்தியாவில் 25-க்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த 7 கரோனா தடுப்பூசிகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. இதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *