2,600 இடங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு கிடங்கு

தமிழகத்தில் 2,600 இடங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு கிடங்குகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு மொத்தமாக தடுப்பூசிகளை வாங்கும். பின்னர் அவற்றை ரேஷன் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு குறைந்த விலையில் பகிர்ந்து அளிக்கும்.

கொரோனா தடுப்பூசிக்கு விலை நிர்ணயிப்பதா அல்லது இலவசமாக போடுவதா என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் 2,600 இடங்களில் தடுப்பூசியை சேமிப்பதற்கான கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 2 கோடி தடுப்பூசிகளை சேமித்து வைக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *