தெலங்கானா ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்ஸின் என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. நாடு முழுவதும் 12 இடங்களில் இந்த மருந்து சோதனை செய்யப்படுகிறது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, பிஹார் எய்ம்ஸ் மருத்துவமனை, ஹைதராபாத் நிஜாம் அரசு மருத்துவமனை, ஹரியாணா, உத்தரபிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவமனையில் தடுப்பூசி பரிசோதனை அண்மையில் தொடங்கப்பட்டது.
இந்த வரிசையில் சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோவேக்ஸின் கொரோனா தடுப்பூசி சோதனை கடந்த 23-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த பரிசோதனை குறித்த அறிக்கை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் வழங்கப்படும்.