3 கொரோனா தடுப்பூசிகள் .. சக்சஸ் பாதையில்…

இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகளின் பரிசோதனைகள் சக்சஸ் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் மருந்து நிறுவனம் ‘கோவேக்ஸின்’ என்ற பெயரில் கொரோனா தடுப்பூசியை தயார் செய்துள்ளது.இதேபோல குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்த ஜைடஸ் கேடில்லா மருந்து நிறுவனம் ‘ஜைகோவ்-டி’ என்ற பெயரில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.

இந்த இரு தடுப்பூசிகளும் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

குஜராத்தின் அகமதாபாத்தில் செயல்படும் ஜைடஸ் மருந்து நிறுவனம்.
குஜராத்தின் அகமதாபாத்தில் செயல்படும் ஜைடஸ் மருந்து நிறுவனம்.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த செரம் இன்ஸ்டிடியூட், இந்தியாவில் பரிசோதனை செய்து வருகிறது.இந்த தடுப்பூசிக்கு ‘கோவிட்ஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கோவேக்ஸின் தடுப்பூசி


மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்தில், பிரித்தெடுக்கப்பட்ட கரோனா வைரஸின் மரபணுக்களை அடிப்படையாக வைத்து பாரத் பயோடெக் தடுப்பூசியை தயாரித்துள்ளது. அதாவது ஆய்வகத்தில் கரோனா வைரஸின் வீரியம் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளது.

இவை கொல்லப்பட்ட கிருமிகள் ஆகும். இவற்றை பயன்படுத்தி தடுப்பூசி தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடுப்பூசியை மனிதனின் உடலில் செலுத்தும்போது எவ்வித ஆபத்தும் ஏற்படாது. கரோனா வைரஸை அழிக்கும் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கும்.


சென்னை, டெல்லி, பாட்னா, ரோட்டக் உள்பட நாடு முழுவதும் 12 மருத்துவ மையங்களில் கோவேக்ஸின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல ஜைடஸ் கேடில்லா நிறுவனத்தின் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசியும் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிராவின் புனேவில் செயல்படும் செரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம்.
மகாராஷ்டிராவின் புனேவில் செயல்படும் செரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம்.

பாரத் பயோடெக்கும் ஜைடஸ் கேடில்லா நிறுவனமும் 2-ம் கட்ட பரிசோதனை நிலையில் உள்ளன.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்கும் செரம் இன்ஸ்டிடியூட் ஒரு படி முன்னேறி 3-ம் கட்ட பரிசோதனையை தொடங்கியுள்ளது.


மத்திய அரசின் நிதி ஆயோக் உறுப்பினரும், தேசிய கரோனா வைரஸ் தடுப்பு செயல் குழுவின் தலைவருமான டாக்டர் வி.கே.பால், இந்தியாவில் பரிசோதனை செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகள் குறித்து டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

“இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகளின் பரிசோதனை சக்சஸ் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த மருந்துகளுக்கான விலையை நிர்யணம் செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. இதுவரை விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.

இரண்டு தடுப்பூசிகள் முதல் மற்றும் 2-ம் கட்ட பரிசோதனையில் உள்ளன. அவற்றின் முடிவுகள் இன்னும் சில வாரங்களில் கிடைக்கும். மற்றொரு தடுப்பூசி 3-வது கட்ட பரிசோதனைக்கு முன்னேறியுள்ளது.

மூன்று தடுப்பூசிகளின் பரிசோதனைகளும் வெற்றியடையும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம். எனினும் 100 சதவீத வெற்றியை எதிர்பார்க்க முடியாது” என்று டாக்டர் வி.கே.பால் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *