அடுத்த ஆண்டு இறுதியில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும்

அடுத்த ஆண்டு இறுதியில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் மருந்து நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’, குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்த ஜைடஸ் கேடில்லா மருந்து நிறுவனம் தயாரித்துள்ள ‘ஜைகோவ்-டி’ கொரோனா தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த செரம் இன்ஸ்டிடியூட், இந்தியாவில் பரிசோதனை செய்து வருகிறது. இந்த தடுப்பூசிக்கு ‘கோவிட்ஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரஷ்ய நிறுவனம் தயாரித்துள்ள ஸ்புட்னிக்-5 என்ற கொரோனா தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் மூலம் இந்தியாவில் விநியோகம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

தமிழகத்தில் 5,528 பேர் கொரோனா பரிசோதனைக்காக ஒருவரின் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனைக்காக ஒருவரின் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.

இதன்படி 10 கோடி ஸ்புட்னிக்-5 தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.

மத்திய அமைச்சர் கணிப்பு

இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நிருபர்களிடம் கூறும்போது, “அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும்.

மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த முதல் நபராக நானே தடுப்பூசியை போட்டுக் கொள்ள தயாராக உள்ளேன். முதலில் தேவை உள்ளோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் கணிப்பின்படி அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வர்த்தரீதியாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை நிபுணர்கள் விரிவான விளக்கம் அளித்துள்ளனர்.

கொரோனா பரிசோதனைக்காக முதியரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனைக்காக முதியரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

காலஅவகாசம் தேவை

“மத்திய அரசின் கணிப்பின்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி சந்தையில் கிடைக்கலாம்.

நோயாளிகள், முன்கள பணியாளர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும்.

இந்த தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய காலஅவகாசம் தேவைப்படும்.அந்த வகையில் அடுத்த ஆண்டு இறுதியில்தான் பெரும்பான்மையான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும்.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 130 கோடிக்கும் அதிகமாகும்.

நாடு முழுவதும் 130 கோடி இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட குறைந்தபட்சம் 18 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை ஆகலாம்” என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *