கொரோனா தொற்று குறையும் என்று தமிழக சுகாதார துறை முதன்மை செயலாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மார்ச் தொடக்கத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தார்.
தமிழகத்தில் இதுவரை 25.39 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. தமிழக அரசிடம் தற்போது 14 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. ஏப்ரல் 2-ம் தேதி கூடுதலாக 10 லட்சம் தடுப்பூசிகள் வந்து சேரும்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தொட்டு அதன்பிறகு குறைய தொடங்கும். கொரோனா தொற்று அதிகம் காணப்படும் 512 இடங்கள் கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.