செல்போன் ஸ்கிரீனில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை வாழும் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நோய் தடுப்பு மையம் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. அதன் ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
“கண்ணாடி, செல்போன் ஸ்கிரீன், பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் போன்ற வழுவழுப்பான பொருட்களில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர் வாழும்.
40 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும் நாடுகளில் திடப் பொருட்கள் மீது கொரோனா வைரஸ் ஒரு நாள் வரை உயிர் வாழ்கிறது.
குளிர்பிரதேச நாடுகளில் திடப்பொருட்களில் கொரோனா வைரஸ் அதிக நாட்கள் உயிர் வாழும்.
கொரோனா வைரஸ் நோயாளி இருமும்போதும் தும்மும்போதும் அவரிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுகிறது.
நோயாளிகள் பேசும்போதும் பாடும்போதும்கூட வைரஸ் பரவ வாய்ப்புள்ளது” என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.