நவம்பர், டிசம்பரில் கொரோனா அதிகரிக்கும்

சென்னையில் நவம்பர், டிசம்பரில் கொரோனா அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

“நவம்பர், டிசம்பர் பண்டிகை காலமாகும். மேலும் மழைக்காலம், குளிர்காலமும் தொடங்க உள்ளது. இந்த காலகட்டத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பொதுமக்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *