வலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி

வலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நேற்று தொடங்கியது.

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியமான மும்பை இந்தியன்ஸும் முன்னாள் சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸும் (சிஎஸ்கே) களமிறங்கின.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை சேர்த்தது. வலிமையான மும்பை அணி தொடக்கத்தில் வரிசையாக விக்கெட்டுகலை இழந்தது. ரோஹித், ‘டி காக், சூரியகுமார் யாதவ் அடுத்தடுத்து ஆட்டத்தில் இருந்து வெளியேறினர்.

163 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியும் தொடக்கத்தில் வரிசையாக 2 விக்கெட்டுகளை இழந்தது. எனினும் அம்பதி ராயுடு, டூப்பிளஸ் கூட்டணி அபாரமாக ரன்களை குவித்தது. மேலும் டூப்பிளஸியின் பீல்டிங் அபாரமாக இருந்தது. அவர் பிடித்த 2 கேட்சுகளை மறக்க முடியாது.

சிஎஸ்கே அணியில் மூத்த வீரர்கள் திகம் இடம்பெற்றிருந்தனர். இதனால் அந்த அணி டாடிஸ் அணி (அப்பா அணி) என்று அழைக்கப்பட்டது.

மும்பை அணியில் சூர்ய குமார், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு உள்ளிட்ட வீரர்கள் அணிக்கு வலிமை சேர்த்தனர்.

எனினும் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் அனுபவத்தால் சிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை பந்தாடியது.

சிஎஸ்கே வீரர் சாம் கரண் 6 பந்துகளில் அதிரடியாக 18 ரன்களை குவித்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

தல தோனியின் சிறப்பான தலைமையால் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி வாகை சூடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *