கொரோனாவுக்கு கணவர் பலி – 18-வது மாடியிலிருந்து மகளுடன் குதித்து பெண் இன்ஜினீயர் தற்கொலை

கொரோனாவால் கணவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூழலில் மருத்துவ உதவிக்கு யாருமில்லாததால் மனவேதனையடைந்த மனைவி, மகளுடன் 18-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்தவர் ரவிராஜா. 40 வயதாகும் இவர், இன்ஜினீயரிங் படித்து விட்டு மலேசியாவில் வேலைப்பார்த்து வந்தார். இவரின் மனைவி சத்யாபாய். இவரும் இன்ஜினீயர். இந்தத் தம்பதியினருக்கு 5 வயதில் மகள் உள்ளார்.

சத்யாபாயும் மலேசியாவில் இன்ஜினீயராகப் பணியாற்றி வந்தார். அதனால் ரவிராஜா குடும்பத்தினரோடு தரமான் தெனகாசாலாக் செலத்தானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 18-வது மாடியில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 14-ம் தேதி ரவிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீட்டில் சத்யாபாய், அவரின் மகள் ஆகியோர் தனியாக இருந்தனர். அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

17-ம் தேதி சத்யாபாயிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் உதவிக்கு யாருமில்லை. போனில் உறவினர்களிடம் ஹெல்ப் கேட்டிருக்கிறார். ஆனால் யாரும் உதவி செய்யவில்லை. அதனால் மனவேதனையடைந்த சத்யா பாய், தன்னுடைய மகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து 5 வயது மகளோடு 18-வது மாடியிலிருந்து கீழே குதித்தார். அதில் இருவரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து இருவரின் சடலத்தையும் மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சமயத்தில் ரவிராஜாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தொற்றால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, மகள் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களின் ஆஸ்தியை கடலூருக்கு கொண்டு வநது இறுதி அஞ்சலி செலுத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அவரின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *