பண்ரூட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளையை போலியாக தொடங்கி 3 மாதங்கள் நடத்தி வந்த 2 பேரை போலீசார் பிடித்துள்ளனர். இந்தத் தகவலைக் கேள்விபட்ட ஒரிஜினல் வங்கி அதிகாரிகளும் பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
போலி வங்கி கிளை
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கமல் பாபு (19). இவரின் தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் குடும்ப சுமையை கமல்பாபுவின் அம்மா லட்சுமி சுமந்தார். கமல் பாபுவின் அம்மா தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். வ ங்கியில் பணியாற்றி வந்துள்ளார். அவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றுவிட்டார்.
வேலைக்கு செல்லாமல் ஊரைச் சுற்றி வந்த கமல் பாபுவுக்கு திடீரென ஒரு யோசனை வந்தது. அதை ஊரடங்கு நேரத்தில் செயல்படுத்தினார். அம்மா வேலைப்பார்த்த வங்கியின் பெயரில் போலியாக கிளை ஒன்றை தொடங்கினார். கடந்த 3 மாதங்கள் எந்தவித பிரச்னை இல்லாமல் டூப்ளிக்கெட் வங்கி செயல்பட்டது.

அதிர்ச்சி
கமல் பாபு தொடங்கிய போலி பண்ரூட்டி வங்கி கிளையின் செயல்பாடுகளைக் கவனித்த வாடிக்கையாளர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் சம்பந்தப்பட்ட ஒரிஜினல் வங்கியின் கிளை மேலாளரைச் சந்தித்து தன்னுடைய சந்தேகத்தை கூறினார்.
உடனே சம்பந்தப்பட்ட நிர்வாகம், விசாரணையில் களமிறங்கியது. பண்ரூட்டியில் உள்ள வங்கி கிளை மேலாளர்களிடம் விசாரித்தபோது புதியதாக கிளை தொடங்கப்பட்ட தகவல் அவர்களுக்கு தெரியவில்லை. இதையடுத்து ஒரிஜினல் வங்கி அதிகாரிகள் கமல்பாபுவின் டூப்ளிகெட் வங்கிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பொதுமக்கள் ஏமாறுவதற்கு முன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். இல்லையெனில் போலி வங்கி கிளை எனத் தெரியாமல் கமல்பாபு விரித்த வலையில் பொதுமக்கள் சிக்கியிருப்பார்கள்
போலீஸ்
3 பேர் கைது
அதனைத் தொடர்ந்து டூப்ளிக்கெட் வங்கி கிளை நடத்தி வந்த கமல் பாபு உட்பட அவருக்கு உடந்தையாக இருந்த மாணிக்கம், குமார் ஆகிளோரை போலீசார் கைது செய்தனர். இதில் மாணிக்கம், ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவந்துள்ளார். குமார், அச்சகத்தின் உரிமையாளர்.
போலியாக ஆரம்பிக்கப்பட்ட கிளையில் இருந்து எழுதுபொருள் பொருட்கள் மற்றும் போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து அந்தக் கட்டிடத்துக்கு சீல் வைத்தனர். கிளையில் எந்தவித பண பரிவர்த்தனைகளும் நடக்கவில்லை என்றும் இதுவரை யாரும் டூப்ளிக்கெட் வங்கியால் ஏமாற்றப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் கைதான மூன்று பேரிடமும் விசாரணை நடந்துவருகிறது.
யார் இந்த கமல்பாபு?
யார் இந்த கமல்பாபு என போலீசாரிடம் கேட்ட போது, “வங்கியில் வேலைப்பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்துள்ளது. ஆனால் வேலை கிடைக்கவில்லை. அதனால் வீட்டிலேயே வங்கி கிளை ஒன்றை பக்காவாக ரெடி செய்த கமல்பாபு, வங்கியில் நடக்கும் அனைத்தையும் பணிகளையும் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
ஆனால் பொதுமக்கள் ஏமாறுவதற்கு முன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். இல்லையெனில் போலி வங்கி கிளை எனத் தெரியாமல் கமல்பாபு விரித்த வலையில் பொதுமக்கள் சிக்கியிருப்பார்கள்” என்றனர்.
பண்ரூட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பெயரில் போலியாக கிளை தொடங்கிய சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.