நள்ளிரவு செல்போன் கால்கள்; நடுங்கும் பெண்கள் – சைபர் க்ரைம்ஸ் அதிர்ச்சி பின்னணி

சென்னனயில் குறிப்பிட்ட பெண்களுக்கு வரும் செல்போன் அழைப்புகளால் அவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

சென்னையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளே மக்கள் முடங்கியிருந்தாலும் போன் வழியாக நள்ளிரவில் தொல்லைகளை பெண்கள் சந்தித்து வருகின்றனர். சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு அடிக்கடி நள்ளிரவு நேரத்தில் போன் கால்கள் வந்துள்ளன.

எதிர்முனையில் பேசியவர்கள் பெண்களுக்கு பாலியல் தொல்லைகளைக் கொடுத்துள்ளனர். போன் கால்களால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகார்களை ஆன் லைனிலும் நேரிலும் கொடுத்துவருகின்றனர்.

cyber attack

நான் அம்பத்தூரில் குடியிருந்து வருகிறேன். எனக்கு திருமணமாகிவிட்டது. குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக என்னுடைய செல்போனுக்கு அடிக்கடி போன் கால்கள் வருகின்றன. அதில் பேசுபவர்கள் என்னிடம் பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் பேசுகின்றனர்.

அவர்கள் யாரென்றே எனக்கு தெரியவில்லை. அதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன், என்னைப் போல இன்னும் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அவரின் எதிர்கால நலன்கருதி புகார் கொடுத்த பெண்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பெண்கள் மற்றும் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் கேட்டதற்கு “அம்பத்தூர் பகுதியில் குறிப்பிட்ட சிலரின் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட பெண்களின் போன் நம்பர், அவர்களின் மார்பிங் ஆபாச போட்டோஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

cyber attack

அவர்களை கால் கேர்ள்ஸ் என்று அந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப்பார்ப்பவர்கள் போனில் தொடர்பு கொண்டு தொல்லைக் கொடுத்துள்ளனர். பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைக் கொடுத்தவர்கள் யாரென்று தேடிவருகிறோம்” என்றனர்.

பெண்களுக்கு வாட்ஸ் அப்பிலும் மெசேஜ்களும் வந்துள்ளன அதில் நீங்கள் யாரு, உங்களை ரொம்ப பிடிக்கும் என்று மெசேஜ் தொடங்குகிறது. அதற்கு நீ யாரு என்று கேட்டால், என்னைப்பற்றிய தகவல் எதற்கு இப்போது, உன்னைப்பற்றி சொல் மை டீயர் என்று அடுத்த மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்கள், மிஸ்டர் யாரு என்று கேட்டால், ஃபேஸ்புக்கில் உள்ள ஆபாச படத்தை அனுப்பி அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளார் எதிர்முனையில் இருந்த ஆண் குரல்.

face book
face book

அதனால் பதறிப்போன பெண்கள், செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு நடந்த சம்பவத்தை குடும்பத்தில் யாரிடம் சொல்லாமல் தங்களுக்குள் வைத்துள்ளனர். இந்தச் சமயத்தில்தான் சில துணிச்சல் பெண்கள், இந்தச் சம்பவம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவில் புகாரளித்துள்ளனர். அதன்பிறகே ஒவ்வொருவராக புகார்கள் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

பெண்களின் தனிப்பட்ட புகைப்படங்களை எடுத்து அதை ஆபாசமாக மார்பிங் செய்யும் சைக்கோ சைபர் கிரிமினல் யாரென்று விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மார்பிங் செய்யப்பட்ட போட்டோஸ்கள் என்றாலும் சம்பந்தப்பட்ட பெண்கள் மனதளவில் வேதனையடைந்துள்ளனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *