நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன. இதேபோல சமையல் காஸ் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.
இந்நிலையில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை கடந்த வியாழக்கிழமை ரூ.25 உயர்த்தப்பட்டது. இந்த மாதத்தில் மட்டும் ரூ.100 விலை உயர்த்தப்பட்டிருக்கிறதுது. சென்னையில் தற்போது ஒரு சிலிண்டர் ரூ.785-க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.810-க்கு விற்கப்படுகிறது.