இந்த பெண் போல சைக்கிள் ஓட்டிகளை ஓட்ட முடியுமா? வைரலாக பரவும் வீடியோ

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீரர் ரெக்ஸ் எவரெட் சாப்மேன். 52 வயதாகும் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புதுமையான வீடியோக்களை வெளியிட்டு வருவதால் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்.


இவர் கடந்த 3-ம் தேதி ஒரு இளம் பெண்ணின் சாகச வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் வட்ட வடிவில் இளைஞர்கள் சைக்கிள் ஓட்டி செல்கின்றனர். அவர்களின் முதுகில் மிதித்து அந்த பெண், லாவலமாக தாண்டி செல்கிறார்.


அந்த பெண் யார் என்பது குறித்து ரெக்ஸ் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. எனினும் வீடியோவின் அடிக்குறிப்பில் அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “மக்களின் சிந்தனைகள் புதுமையாகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையிலும் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கடற்கரையில் ஒரு கழுகு, சிறிய சுறாவை எளிதாக கவ்விச் செல்லும் வீடியோவையும் ரெக்ஸ், ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவின் அடிக்குறிப்பில், இந்த பறவையின் பெயர் என்ன, உண்மையிலேயே அந்த பறவை சுறாவை தூக்கிச் செல்கிறதா என்று வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *