புயல் தொடர்பாக 1070, 1077 அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புயல் தொடர்பான அத்தியாவசிய உதவிகளுக்கு மாநில பேரிடர் மேலாண்மை துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாநில அளவிலான அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை 1070 என்ற எண்ணிலும் மாவட்ட அளவிலான அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவை தவிர TNSMART செயலியை பதிவிறக்கம் செய்து புயல் தொடர்பான தகவல்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறை சார்பில் புயல் கண்காணிப்பு, மீட்புப் பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல் துறை கட்டுப்பாட்டு மையத்தை 044-24343662, 044-24331074 ஆகிய எண்கலில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.