இளம்பெண்ணின் நூடூல்ஸ் ஆட்டம்… சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த சில நாட்களாக ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், சாலையோரத்தில் ஒரு பெண் அடுப்பில் நூடுல்ஸ் தயார் செய்கிறார்.
பற்றி எரியும் அடுப்பில் சட்டியில் நூடுல்ஸ் வேகிறது. அந்த நூடூல்ஸை தயார் செய்யும் இளம்பெண், சட்டியை எடுத்து தென்கொரியாவின் பிரபல கங்னம் பாப் பாடலுக்கு அட்டகாசமாக நடனம் ஆடுகிறது.
சட்டியை அப்படியே தலையை சுற்றி சுழற்றுகிறார். ஆனால் ஒரு நூடூல்ஸ்கூட கீழே சிந்தவில்லை, சிதறவில்லை.
ஒட்டுமொத்த கூட்டமும் அவரது ஆட்டத்தில் அப்படியே மெய்மறந்து சிலிர்த்து நிற்கிறது.
இந்த வீடியோவை இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 33 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் தெரிவித்துள்ளனர்.
வீடியோவில் ஆடும் பெண் யார், அவர் எங்கு ஓட்டல் நடத்துகிறார் என்ற விவரம் தெரியவில்லை.
கங்னம் பாடலுக்கு ஆடுவதால் அவர் தென்கொரியாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.