சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு சட்ட கல்லூரிகளில் மூன்றாண்டு எல்.எல்.பி சட்டப்படிப்பு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் மூன்றாண்டு எல்.எல்.பி., ஹானர்ஸ் சட்டப்படிப்பு, இரண்டாண்டு முதுகலை சட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரஞ்சித் அறிவித்துள்ளார்.