ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்… இளைஞருக்கு தூக்கு

ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்… இளைஞருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டம், கொர்ரகுண்டாவில் உள்ள சணல் தொழிற்சாலையில் மக்சூத்,  அவரது மனைவி நிஷா வேலை செய்து வந்தனர்.

இவர்களுக்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் பழக்கமானார். நிஷாவின் சகோதரியான ரஃபீகா (வயது 31), கணவரை பிரிந்து தனது 3 குழந்தைகளுடன் நிஷாவின் வீட்டில் தங்கி இருந்தார்.  ரஃபீகாவுக்கும் சஞ்சீவ் குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ரகசியமாக கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில்  ரஃபீகாவின் 12 வயது மகளிடம், சஞ்சீவ் குமார் தவறான முறையில் நடக்க முயற்ச்சித்துள்ளார். இதனை அறிந்த ரஃபீகா, சஞ்சீவ் குமாரை எச்சரித்துள்ளார். 

இதனால், ரஃபீகாவை கொல்ல சஞ்சீவ் திட்டமிட்டுள்ளார். கடந்த மார்ச்  6-ம் தேதி ரஃபீகாவை விசாகப்பட்டினம் செல்லும் ரயிலில் சஞ்சீவ் அழைத்து சென்றார். அப்போது மோரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, ஓடும் ரயிலில் இருந்து ரஃபீகாவை தள்ளிவிட்டார். பின்னர் வாரங்கல் வந்து விட்டார். 

சிறிது நாட்கள் கழித்து ரஃபீகாவின் சகோதரியான நிஷாவிற்கு சந்தேகம் வந்து, எனது சகோதரி எங்கே என சஞ்சீவை கேட்டுள்ளார். அதற்கு அவர் பீகாருக்கு சென்றுள்ளார். விரைவில் வந்து விடுவார் என சமாளித்து வந்துள்ளார். 

இதில், நிஷாவிற்கு சந்தேகம் எழுந்தது. என் தங்கையை அழைத்து வரா விட்டால், போலீஸில் புகார் அளிப்பேன் என கூறினார். இதனால், நிஷாவையையும், அவரது குடும்பத்தினரையும்  கொல்ல சதி திட்டம் தீட்டினார் சஞ்சய். 

கடந்த மே  20ம் தேதி, மக்சூத்தின் மூத்த மகன் ஷாபாஸின் பிறந்தநாள். இந்த நாளில் அனைவரையும் கொல்வது என சஞ்சய் முடிவு செய்தார். அதன்படி, மே 20ம் தேதி, பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட சஞ்சய், பிறந்தநாளுக்காக தயார் செய்திருந்த விருந்து உணவு வகைகளில் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக கலந்தார். அனைவரும் விருந்து உணவு வகைகளை சாப்பிட தொடங்கினர். தனக்கு வயிற்று வலி என்பதால் சாப்பாடு வேண்டாம் என சஞ்சய் கூறி விட்டார். 

விருந்து உணவு வகைகளை சாப்பிட்ட மக்சூத் ( வயது 50), இவரது மனைவி நிஷா ( வயது 45), மகள் புஸ்ரா (வயது 20), மகன் ஷாபாத் (வயது 22), சோஹைல் (வயது 20) புஸ்ராவின் 3 வயது மகன் மற்றும் அந்த வீட்டின் மொட்டை மாடியில் தங்கி இருந்த பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் ஷியாம் (வயது 22), ஸ்ரீராம் (வயது 20) மயங்கி தூங்கிவிட்டனர். நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அனைவரையும் அருகில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் வீசி சஞ்சய் குமார் கொலை செய்துள்ளார்.  பின்னர் தனது வீட்டுக்கு சென்று விட்டார். 

போலீஸ் விசாரமையில் கண்காணிப்பு கேமராக்கள் சஞ்சயை காட்டி கொடுத்தன. இதனை தொடர்ந்து போலீஸார் சஞ்சயை கைது செய்தனர். இந்த வழக்கு வாரங்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதியில் சஞ்சய்தான் கொலையாளி என்பது உறுதியானதால், அவருக்கு இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

ஒரு கொலையை மறைக்க 9 கொலைகளை செய்த சஞ்சய் குமாருக்கு 24 வயது மட்டுமே ஆகிறது. இந்த வழக்கில் விரைந்து நீதி வழங்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *