கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு கடன்

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபரை கொரோனாவால் இழந்திருந்தால் ஸ்மைல் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். கடன் தொகையில் ரூ.4 லட்சம் கடனாகவும், ரூ.1 லட்சம் மானியமாகவும் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பினால் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகம், சென்னை-1 என்ற முகவரியை அணுகலாம்.

மாவட்ட கூட்டுறவு வங்கி அதன் கிளைகள், சைதாப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி, ஜார்ஜ் டவுன் நகர கூட்டுறவு வங்கி, வெள்ளாள நகர கூட்டுறவு வங்கி, புரசைவாக்கம் நகர கூட்டுறவு வங்கி, தியாகராயா நகர கூட்டுறவு வங்கி ஆகியவற்றை அணுகி விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *