தீபாவளிக்கு தேவைக்கு ஏற்ப பஸ் வசதி

தீபாவளிக்கு தேவைக்கு ஏற்ப பஸ் வசதி செய்து தரப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

“அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தற்போது 70 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. காலை, மாலை வேளைகளில் அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நீண்ட தொலைவு பஸ்களுக்கு முன்பதிவு தொடங்கி உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ் வசதி செய்தி தரப்படும்” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *