நடிகை தீபிகாவுக்கு கொரோனா

நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோன். இந்தி உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து இந்தியா முழுவதும் புகழ் பெற்றுள்ளார். இவரது தந்தை பிரகாஷ் படுகோன், முன்னாள் பாட்மிண்டன் வீரர் ஆவார்.

பிரகாஷ் படுகோன், அவரது மனைவி உஜ்ஜாலா, இளைய மகள் அனிஷா ஆகியோருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் பிரகாஷ் படுகோன் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் பிரகாஷ் படுகோனின் மூத்த மகள் தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் முகாமிட்டுள்ள அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *